மொனராகலை ஹந்தபானகல பிரதேசத்திலுள்ள முடி திருத்தும் கடையொன்றில் தலைமுடி மற்றும் தாடிக்கு சாயம் பூசி சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபருக்கு சாயம் பூசி சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மரணமடைந்துள்ளதாக பதுளை மரண விசாரணை அதிகாரி டபிள்யூ.ஏ.சி. திருமதி லக்மாலி வெளிப்படையான தீர்ப்பை வழங்கினார்.
இச்சம்பவத்தில் 37 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இவர் காலையில் முடி திருத்தும் கடைக்கு சென்று முடி மற்றும் தாடியை வெட்டி சாயம் பூசி விட்டு வீட்டிற்கு வந்து பின்னர் மதியம் முகத்தில் வீக்கம் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் மனைவி உடனடியாக தனது கணவரை தனது மோட்டார் சைக்கிளில் ஹந்தபனகல கிராமிய வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதுடன் வைத்தியர்கள் அவருக்கு முதலுதவி அளித்து பின்னர் ஆம்புலன்ஸில் வெள்ளவாய ஆரம்ப வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் வெல்லவே மரண விசாரணை அதிகாரியின் அறிவிப்பின்படி மேலதிக விசாரணைக்காக பதுளை நிபுணர் சட்ட வைத்தியர் டபிள்யூ.ஏ.சி. லக்மாலி, வெல்லவாய திடீர் மரண விசாரணை அதிகாரி ரொஷான் ஹேவாவிதாரண, வெல்லவாய சுகாதார வைத்திய அதிகாரி ஜே.எம்.விமலசூரிய ஆகியோர் முடி திருத்தும் நிலையத்திற்குச் சென்று ஸ்தல பரிசோதனையை மேற்கொண்டனர்.
மேலதிக விசாரணைக்காக அங்கு சாயமிடுவதற்கு பயன்படுத்தப்படும் சாயங்களை பெற்றுக்கொள்ளுமாறு நிபுணர் வெல்லவாய பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கினார்.
சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.