யாழ்ப்பாணம் – ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் பெருமளவிலான போதைப்பொருட்களுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் (28-12-2024) சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியின் கீழ் இயங்கும் பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் 41 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கையின் போது, பெண்ணிடமிருந்து 5,830 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 1,070 மில்லிக்கிராம் ஹெரோயின் என்பன மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.