இஸ்ரேல் சட்டவிரோதமான முறையில் சென்று அங்கு விவசாயத் துறையில் வேலை செய்துவந்த நிலையில், இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட இளைஞர்கள் குழு ஒன்றுக்கு மீண்டும் அந்நாட்டில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதன்படி, குறித்த இளைஞர்களுக்கான விமான பயணச்சீட்டுகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக வளாகத்தில் சமீபத்தில் வழங்கப்பட்டது.
மேலும் இந்த வேலை வாய்ப்புகள் 79 இளைஞர்களுக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இஸ்ரேலில் 5 ஆண்டுகள் 3 மாதங்கள் சேவைக் காலத்தைக் கொண்டுள்ளனர்.
குறித்த இளைஞர்கள் குழுவினர் நேற்றையதினம் (28-12-2024) இஸ்ரேலுக்கு பயணிக்கவிருந்தமை குறிப்பிடத்தக்கது.