அனுமதிப்பத்திரம் இன்றி அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்ததைத் தொடர்ந்து, டிசம்பர் 29 ஆம் திகதி வரை 75,000 மெற்றிக் தொன் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை இலங்கை சுங்கம் அனுமதித்துள்ளது.
இதில் 32,000 மெற்றிக் தொன் சம்பா அரிசியும் 43,000 மெற்றிக் தொன் நாட்டு அரிசியும் உள்ளடங்குவதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் மேலதிக பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருக்கொட தெரிவித்தார்.
மேலும் அரிசி இறக்குமதியை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அருக்கொட தெரிவித்தார்.
உள்ளூர் உற்பத்தியைப் பாதிக்கும் பாதகமான காலநிலையால் ஏற்படும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, அனுமதிப் பத்திரமின்றி அரிசி இறக்குமதியை அனுமதிக்கும் முடிவு டிசம்பர் 3, 2024 அன்று அமல்படுத்தப்பட்டது.