புத்தளம் மாம்புரி பகுதியில் மின்சாரம் தாக்கியதில், 3 பேர் மரணமடைந்துள்ள சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் (29) ஞாயிற்றுக்கிழமை, கல்பிட்டி வீதி, மாம்புரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கட்டிடம் ஒன்றிற்கு கொங்ரீட் போடுவதற்கு ஆயத்தங்கள் செய்வதற்காக வேலை செய்துகொண்டிருந்த மூன்று இளைஞர்களே , மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் புத்தளம் சோல்ட்டன் பகுதியைச் சேர்ந்த இருவரும் , மதீனா நகரைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.