வவுனியாவில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிக்கி 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச் சம்பவம் இன்றையதினம் (31-12-2024) மாலை இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, பாவற்குளம், படிவம் இரண்டு பகுதியில் சாரதி ஒருவர் பேருந்தை நிறுத்தி விட்டு மீண்டும் சேவையில் ஈடுபடுவதற்காக பேருந்தை செலுத்தியுள்ளார்.
இதன்போது, சைக்கிளில் பயணித்த 2 சிறுவர்கள் வீதியை கடக்க முற்பட்டபோது குறித்த பேருந்துடன் சைக்கிள் மோதியதில் இவ் விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த விபத்தில் சைக்கிளில் பயணித்த 7 வயதுடைய அப்துல் மஜித் உமர் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுவனின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.