நாட்டில் அரிசி, பருப்பு, வெள்ளைப்பூடு, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட 63 அத்தியாவசிய பொருட்களுக்கு தற்போதுள்ள விசேட பண்ட வரியை தொடர்ந்தும் பேணுவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.
முன்னதாக, டிசம்பர் 31ஆம் திகதி வரை உரிய வரிகளை அமுல்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.
இவ்வாறு பண்டங்களுக்கான வரியில் மாற்றங்களை ஏற்படுத்தாது பேணுவதன் மூலம் பொருட்களின் விலையிலும் அதிகரிப்பு ஏற்படுத்தப்படாது என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதெவேளை , உள்ளுர் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில்களை பாதுகாக்கும் நோக்கில் அமுல்படுத்தப்படும் வரி விகிதங்களிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.