கும்பம்
எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வாகனம் தொந்தரவு தரும். உடல் அசதி சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் போட்டியாளர்களை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
மீனம்
திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.
மேஷம்
சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. புது வேலை அமையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.
ரிஷபம்
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் புது முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிந்தனை திறன் பெருகும் நாள்.
மிதுனம்
புதிய பாதையில் பயணிக்க தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கை மாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பி தருவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.—
கடகம்
சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உதவிகள் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.
சிம்மம்
விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. தாயார் ஆதரித்து பேசுவார். பயணங்கள் சிறப்பாக அமையும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நன்மை கிட்டும் நாள்.
கன்னி
குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். நீண்டநாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில்அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
துலாம்
வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.
தனுசு
உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பார்கள். நன்மை நடக்கும் நாள்.
விருச்சிகம்
திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சாமளிப்பீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
மகரம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். விரும்பியபொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.