30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கான விலை மனுக்களை இன்று முதல் கோருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
20,000 மெற்றிக் தொன் உப்பு இதன் முதல் கட்டமாக இறக்குமதி செய்யப்படவுள்ளது.
நடவடிக்கை
இரண்டாம் கட்டத்தின் கீழ் 10,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 20,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கான விலை மனுக்கள் இன்று கோரப்படவுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் உப்பை கைத்தொழில் அமைச்சின் கீழ் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இறக்குமதி செய்யப்படும் உப்பு தொழிற் தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்தப்படும் என்றும் சாதாரண மக்களின் பாவனைக்கு வழங்கப்படாதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.