களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் திருடர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த திருட்டுச் சம்பவம் கடந்த 02ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.
ஹொரணை பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டில் யாரும் இல்லாத வேளையில் திருடர்கள் வீட்டுக்குள் நுழைந்து 25,000 ரூபாவை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.