பொதுவாக தெருக்களில் திரியும் நாய்கள் பகலில் எந்தவிதமான தொந்தரவும் செய்யாமல் இருக்கும். ஆனால் கொஞ்சம் மாலை நேரம் வந்தவுடன் அது ஊளையிட ஆரம்பித்து விடும்.
அதுவும் நள்ளிரவில் வீதியில் வாகனம் செல்லும் போது அல்லது யாராவது நடந்து செல்லும் போது என பாதையில் ஒருவரையும் விட்டு வைக்காமல் துரத்தி செல்லும்.
சில சமயங்கள் இரவில் நாய்கள் அதிகமாக ஊளையிட்டுக் கொண்டே இருக்கும். இதனால் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நாம் கூட திடீரென விழிக்கலாம்.
அந்த வகையில், நாய்கள் ஏன் இரவில் அதிகமாக குரைக்கின்றன? இதற்கு என்ன உண்மையான காரணம் என்ன?என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
நள்ளிரவில் ஊளையிட என்ன காரணம்?
1. இரவு நேரங்களில் தெருக்களில் இருக்கும் நாய்கள் மட்டுமன்றி, வீட்டில் வளர்க்கப்படும் நாய்களும் ஊளையிடுவது வழக்கம். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மரணத்தை முன்கூட்டியே அறிவிக்கும் கெட்ட சகுனம் என சாஸ்த்திரம் கூறுகிறது.
2. தெரு நாய்கள் தங்களின் கூட்டத்தில் இருக்கும் மற்ற நாய்களுக்கு சிக்னல் கொடுக்கும் விதமாக இரவில் குரைக்கின்றது என ஆய்வுகள் கூறுகிறது. அது தவிர, சுற்றி உள்ள நாய்களுடன் உரையாடும் விதமாகவும் நாய்கள் இப்படி குரைக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது.
3. சில இடங்களில் நாய்கள் சண்டையிடும். இப்படி நடந்து கொள்வது சில நாய்களுக்கு பிடிக்காதாம். இது போன்று பிடிக்காத சூழலில் நாய்கள் இருக்கும் பொழுது அதனை வெளிகாட்டும் விதமாக குரைக்கும் என்கிறார்கள்.
4. இந்த எல்லை தன்னுடையது என்றும், மற்ற நாய்கள் இங்கு ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்றும் எச்சரிக்கும் விதமாக நாய்கள் இரவில் குரைத்து கொண்டிருக்கும்.
5. சுற்றுச்சூழலில் நடக்கும் சிறிய மாற்றங்களை கூட நாய்களால் இலகுவாக உணர முடியும். அதிலும் குறிப்பாக பட்டாசு வெடிப்பது, பார்ட்டிகளில் எழுப்பப்படும் அதிக ஒலி, வாகனங்களின் ஹாரன், சைரன் ஆகிய சத்தங்கள் தெருக்களில் உள்ள நாய்களை எரிச்சலடைய வைக்கும். இதன் விளைவாக நாய்கள் ஊளையிடும்.
6. நாய்களின் உடலில் ஏதாவது காயங்கள் இருந்தால் அதன் வலியால் நாய்கள் அசௌகரியத்தை அனுபவிக்கும். இதனை வெளிப்படுத்தும் விதமாக இரவில் குரைக்கும். சில நாய்கள் பகல் முழுவதும் தேடி அலைந்து உணவுகள் கிடைக்காவிட்டால் இரவில் பசியுடன் உறங்க முடியாமல் குரைத்து அதன் ஆதங்கத்தை வெளிகாட்டும்.