கிரிபாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இஹல மரதன்கடவல பிரதேசத்தில் உள்ளாட்டில் தயாரிக்கப்பட்ட இரு துப்பாக்கிகளை வைத்திருந்த இருவர் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளனர்.
34 மற்றும் 52 வயதுடைய பஹல கிரிபாவ பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கொபெய்கனே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஸ்கஹவெவ சந்தி பிரதேசத்தில் வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் 28 வயதுடைய கொபெய்கனே பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.