தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தாம் அடகுவைத்த தங்க ஆபரணங்களை மீட்பதற்காக சென்ற நபரை நிறுவன ஊழியர் ஒருவர் தகாத வார்த்தைகளை பிரயோகித்ததோடு, அவரை தாக்குவதற்கும் முற்பட்டதாக 2கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்லது.
இது தொடர்பில் பாதிக்கப்பட்டவரால் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
களுவாஞ்சிக்குடி பகுதியில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 19 இலட்சம் ரூபாவுக்கு நபரொருவர் தங்க ஆபரணங்களை அடகு வைத்திருந்தார்.
இதனையடுத்து அவர் அடகு வைக்கப்பட்ட தனது நகைகளை மீட்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (03) பிற்பகல் பணத்துடன் அந்நிறுவனத்துக்குச் சென்றுள்ளார்.
அவ்வேளை, செலுத்தவேண்டிய வட்டி மற்றும் முதல் பணத்தொகை தொடர்பில் கணக்குப் பார்த்தபோது, செலுத்தவேண்டிய மொத்தத் தொகை 20 இலட்சம் ரூபா என நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.
அதற்கு, அந்த நபர், தான் 20 இலட்சம் ரூபா பணம் கொண்டுவந்துள்ளதாக கூறி நகைகளை தருமாறு கேட்க, “இப்போது உங்களது நகைகளை தரமுடியாது ஏன் அவசரமாக மீட்கப் போகின்றீர்கள் இன்னும் இரு நாட்களுக்கு இருக்கட்டும் திங்கட்கிழமை தருகின்றோம் என கூறியுள்ளனர்.
அதற்கு நகை அடகுவைத்த நபர், தனக்கு அவசரமாக நகைகள் தேவை என கூறி நகைகளை கேட்டபோது நிறுவனத்தினர் நகைகளை கொடுக்க மறுத்துள்ளனர்.