சட்டம் தன் கடமையைச் செய்யும், குற்றவாளிகள் எவரையும் இந்த அரசு பாதுகாக்காது அவர்கள் தப்பித்து ஓடவும் முடியாது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார(Harshana Nanayakkara) தெரிவித்துள்ளார்.
‘கடந்த ஆட்சியில் குற்றமிழைத்தவர்கள் இன்று சுதந்திரமாக நடமாடுகின்றார்கள் அவர்களுக்கு எதிராக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“குற்றவாளிகள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். எனவே, அவசரப்பட வேண்டாம், சட்டம் தன் கடமையைச் செய்யும்.
குற்றவாளிகள் எவரையும் இந்த அரசு பாதுகாக்காது. அவர்கள் தப்பித்து ஓடவும் முடியாது. குற்றங்கள் இழைத்தவர்கள் தண்டனைகளை அனுபவித்தே ஆக வேண்டும்.இதில் அரசியல் தலையீடு இருக்க முடியாது” என சுட்டிகாட்டியுள்ளார்.