இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு 09 மாத சிறைத்தண்டனை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன் தண்டனைக்கு மேலதிகமாக 1500 ரூபா அபராதம் விதிக்கப்படும் என கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை 16,அன்று, கிருலப்பனையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், “இஸ்லாம் ஒரு புற்றுநோய்… அதை துடைத்தெறிய வேண்டும்” என்று கூறினார்.
இந்நிலையில் ஞானசார தேரர் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டதாக, மை குறிப்பிடத்தக்கது.