இலங்கையில் இன்று(9) 24 கரட் தங்க விலை மேலும் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (9) தங்க நிலவரப்படி,
24 கரட் தங்கம் 212,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 195,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 159,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 26,563 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 24,375 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 19,938 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.