உயர்நீதிமன்ற வளாகக் கட்டிடத்தின் புதுப்பித்தல் காரணமாக, 2025 ஜனவரி 15 முதல் கொழும்பு 12 இன் அதிகார மாவத்தையில் (Adhikarana Mawatha) அமைந்துள்ள புதிய MCC கட்டிடத்திற்கு உயர் நீதிமன்ற செயற்பாடுகள், தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படவுள்ளன.
இதற்கிடையில், ஜனவரி 15 முதல் பழைய நீதி அமைச்சக கட்டிடத்தில் அமைந்துள்ள புதிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தில், மேல்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் அமர்வுகளை ஆரம்பிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வரையறுக்கப்பட்ட வசதிகள் தொடர்பாக பொதுமக்கள், சட்டத்தரணிகளுக்கு ஏற்படும் ஏதேனும் சிரமத்திற்கு உயர் நீதிமன்றத்தின் மார்ஷல்ஸ் அலுவலகம் வருத்தம் தெரிவித்துள்ளது.