ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர (Hirunika Premachandra) அரசியல் ரீதியான எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
சஜித் பிரேமதாச (Sajith Premadasa) பலவீனமான அரசியல் தலைவர் என்றும் ஹிருணிகா வர்ணித்துள்ளார்.
அத்தோடு, அவர் தனது தவறுகளை துரித கதியில் திருத்திக் கொள்ளாது போனால் கட்சியில் இருந்து பெரும்பாலானவர்கள் விலகிக் கொள்ளும் நிலை ஏற்படலாம் என்று சஜித் பிரேமதாசவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து அதிருப்தியுற்று விலகும் பலரும் அடுத்த கட்டமாக ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் தான் எந்தவொரு கட்டத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளப் போவதில்லை என்றும் ஹிருணிகா பிரேமசந்திர தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.