2025ஆம் ஆண்டு பிறந்து ஒரு மாதம் ஆகின்ற நிலையில் அடுத்த மாதம் குறித்து பலரும் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இதனை தொடர்ந்து புது வருடம் யாருக்கு எப்படி அமைய போகின்றது என்பதனை ஜோதிட வல்லுநர்கள் கணித்து சில பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
இவர்களின் கணிப்பை மேலை நாடுகளிலேயே ஒரு கூட்டத்தார் கவனித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதன்படி, தன்னுடைய யதார்த்தமான கணிப்பால் 85 சதவீதமான கருத்துக்களை உண்மையாக்கியவர் தான் பாபா வங்கா. இவரின் கருத்துக்கள் மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கின்றது.
அந்த வகையில் புதிய ஆண்டு (2025) ஆம் என்னென்ன நடக்க போகின்றது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
பலிக்குமா?
மேலை நாடுகளில் நடக்கப்போகும் விடயங்களுடன் இந்தியாவில் நடந்த விடயங்கள் நடக்க போகும் விடயங்களை துல்லியமாக கணித்துள்ளார்.
இதன்படி, இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி, ஆரஞ்சு வண்ண உடையில் கொள்ளப்படுவார் என கடந்த 1969ஆம் ஆண்டே கணித்துள்ளார் பாபா வாங்காவின் கணிப்பின் பிரகாரம் 1984ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாதுகாவலர்களால் கொலை செய்யப்பட்டார்.
இதன்போது ஆரஞ்சி வண்ண ஆடை அணிந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2025 ஆம் ஆண்டு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் என பாபா வாங்கா கணித்துள்ளார்.
மேலும் ஒரு பெரிய நாடு உயிரி ஆயுதங்களை பரிசோதிக்கவோ அல்லது பிரயோகிக்கவோ செய்யும் என்று கூறியுள்ளார். ஐரோப்பாவில், 2025இல் தீவிரவாதிகள் தாக்குதல் ஒன்றை நிகழ்த்துவார்கள் என்றும், ரஷ்ய ஜனாதிபதியாகிய விளாடிமிர் புடின் அவரது நாட்டைச் சேர்ந்த ஒருவராலேயே கொல்லப்படுவார் என்றும் கணித்துள்ளார்.