பெலியத்தவிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த விரைவு ரயிலின் இயந்திரம் பயணித்துக்கொண்டிருந்த போது தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் இன்றையதினம் (20-01-2025) மாலை இடம்பெற்றுள்ளது.
எண்டரமுல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எந்திரமுல்ல ரயில் நிலையத்தின் ஊடாக செல்லும் அனைத்து ரயில்களும் இந்த நிலைமை காரணமாக தாமதத்தை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.