நுவரெலியா – உடப்புசல்லாவ குறுக்கு வீதியில் சமூர்த்தி வங்கிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்று இரவு (24) இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் நுவரெலியா மாநகரசபையில் தொழில் புரிந்து வரும் ஹாவாஎலிய பிரதேசத்தினை சேர்ந்த செல்வராஜ் நடராஜ் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா – உடப்புசல்லாவ குறுக்கு வீதியில் சமூர்த்தி வங்கிக்கு அருகில் குறித்த நபர் பயணித்த உந்துருளி விபத்துக்குள்ளான நிலையில் கிடந்ததை அவதானித்த மக்கள் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் விபத்து சம்பவித்த இடத்துக்குச் சென்ற போது உந்துருளியும் அணிந்திருந்த தலைக்கவசமும் மாத்திரம் கிடந்ததாகவும் அதனைத் தொடர்ந்து நுவரெலியா மாநகரசபையின் பிரிவினருக்கு அறிவித்து தேடுதலை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
எனினும் விபத்துக்குள்ளான நபர் தொடர்பில் எந்தவித தகவலும் கிடைக்காமையால் உந்துருளியை மாத்திரம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
இதன் பின்னர் இன்றைய (25) தினம் விபத்து இடம்பெற்ற இடத்தில் உறவினர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தேடுதல் நடத்திய போது நுவரெலியா கிரகறி வாவிக்குச் செல்லும் தலகல ஓயா ஆற்றில் சடலமாக அவர் குறித்த நபர் மீட்க்கப்பட்டுள்ளார்.



















