தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து குஷ் போதைப்பொருளை விமானம் மூலம் நாட்டிற்கு கடத்தி வந்த சந்தேக நபர் ஒருவரும் குறித்த கடத்தலுக்கு உதவிய மற்றுமொரு சந்தேக நபரும் கட்டுநாயக்க விமான நிலையத்தி வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை (31) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 31 மற்றும் 36 வயதுடைய ஹங்வெல்ல மற்றும் உடுகம்பொல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 2 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.