மாதம்பே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொஹொம்பவத்த ஜனபதய பிரதேசத்தில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்டவர் புத்தளம், காக்கப்பல்லிய பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடையவர் ஆவார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொலை செய்யப்பட்டவருக்கும் அயல் வீட்டவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறின் போது கொலை செய்யப்பட்டவர் அயல் வீட்டவரை இரும்பு கம்பியால் தாக்க முயன்றுள்ளார்.
இதன்போது அயல் வீட்டவர், கொலை செய்யப்பட்டவரின் கையிலிருந்த இரும்பு கம்பியை எடுத்து அவரை பலமாக தாக்கியுள்ளார். காயமடைந்தவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து சந்தேக நபரான 29 வயதுடைய அயல் வீட்டவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.