பிரச்சனை இல்லாத மனிதனே இருக்க முடியாது என்றுதான் கூற வேண்டும். இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒன்றிற்கும் மேற்பட்ட பல பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. அந்த பிரச்சனைகளில் இருந்து வெளியே வர முடியாமல் கஷ்டப்படுபவர்களும் பலர் இருக்கிறார்கள். அப்படி அவர்களுடைய பிரச்சினையை சரி செய்வதற்குரிய தீர்வு கிடைக்காமல் கஷ்டப்படுபவர்கள் இந்த ஒரு சொல்லை மட்டும் இன்று இரவு நிலை வாசலில் எழுதி வைத்தால் போதும். அந்த பிரச்சினைக்குரிய தீர்வு விரைவிலேயே கிடைக்கும். அந்த சொல்லைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க
ஒவ்வொரு தெய்வத்திற்கும் உரிய மந்திரங்கள் என்று பல இருக்கின்றன. அந்த மந்திரங்களை நாம் உச்சரிக்கும் பொழுது அந்த மந்திரத்தின் அதிர்வால் அந்த தெய்வத்தை நம் வசமாக்க முடியும் என்று கூறப்படுகிறது. அதன் மூலம் நாம் வேண்டிய வரத்தை நம்மால் பெற முடியும் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் தான் வழிபாடு செய்பவர்கள் மந்திர உச்சாடலை செய்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த மந்திர சொல்லாக பல தெய்வங்களுக்கு பலவிதமான சொற்கள் இருந்தாலும் பொதுவாக அனைத்து தெய்வங்களுக்கும் உரிய சொற்களாக சில சொற்கள் திகழ்கின்றன. அந்த சொற்களை நாம் உச்சரிக்கும் பொழுது அதன் அதிர்வால் குலதெய்வம், இஷ்ட தெய்வம், மகாலட்சுமி என்று அனைவரையுமே நம் வசப்படுத்த முடியும் என்றே கூறலாம்.
பொதுவாக நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீர்வதற்கு அந்த பிரச்சினைக்குரிய தெய்வத்தையே நாம் வழிபாடு செய்ய வேண்டும் என்றாலும் முதலில் நாம் வழிபாடு செய்ய வேண்டியது நம்முடைய குலதெய்வத்தை தான். குலதெய்வத்தின் அருள் இருந்தால் நமக்கு வரக்கூடிய பிரச்சினைகள் அனைத்தும் தீரும் என்று கூறப்படுகிறது. இதோடு இஷ்ட தெய்வத்தின் அருளும் நமக்கு இருந்தால் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் அல்லவா? இவர்கள் இருவரை தவிர்த்து விட்டு மூன்றாவதாக நமக்கு தேவைப்படக்கூடிய தெய்வமாக திகழக்கூடியவர் மகாலட்சுமி தாயார். மகாலட்சுமி தாயாரின் அருள் நமக்கு கிடைத்துவிட்டால் பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு நமக்கு கிடைத்துவிடும். இப்படி இவர்கள் மூவரின் அருளையும் பெறுவதோடு அனைத்து தெய்வங்களையும் வீட்டிற்குள் அழைப்பதன் மூலம் நம்முடைய பிரச்சனைக்குரிய தீர்வு என்பது நமக்கு கிடைத்துவிடும்.
அப்படி அனைத்து தெய்வங்களையும் வீட்டிற்குள் அழைப்பதற்கு செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை இப்பொழுது பார்ப்போம். இதை இன்று இரவு அதாவது வியாழக்கிழமை அன்று இரவு படுக்கச் செல்வதற்கு முன் செய்து விட வேண்டும். விடியும் பொழுது மிகவும் நல்ல பொழுதாக விடியும். அதுவும் தை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை நாளை என்பதால் நாளைய தினத்தில் வீட்டிற்குள் மகாலட்சுமி தாயாரும், குலதெய்வமும் வருவது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. அப்படி நாம் எழுத வேண்டிய ஒரு பெயர் தான் நற்பவி.
இந்த வார்த்தையை பலரும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். நாம் நம்முடைய மனதிற்குள் இந்த வார்த்தையை உச்சரித்துக் கொண்டே இருந்தோம் என்றால் நம்மை தேடி வரக்கூடிய பிரச்சினையும் விலகிச் சென்று விடும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட வார்த்தையை தான் நம்முடைய வீட்டு நிலை வாசனின் முன்பு எழுத வேண்டும். இதற்கு ஒரு சிறிய கிண்ணத்தில் சிறிதளவு மஞ்சள் தூள், சிறிதளவு சந்தனம், சிறிதளவு ஜவ்வாது அல்லது பச்சை கற்பூரம் சேர்த்து இதனுடன் பன்னீர் ஊற்றி குழைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு இதில் வில்வ குச்சி, நெல்லிக்குச்சி, மாதுளைக்குச்சி, துளசி குச்சி போன்ற குச்சிகளில் ஏதாவது ஒரு குச்சியை பயன்படுத்தி நற்பவி என்று எழுத வேண்டும். ஒருவேளை இந்த குச்சிகள் எதுவும் கிடைக்கவில்லை என்னும் பட்சத்தில் நம்முடைய கைகளை சுத்தமாக கழுவி விட்டு மோதிர விரலால் எழுத வேண்டும். இப்படி எழுதிவிட்டு நாம் உறங்கச் சென்று விட வேண்டும். மறுநாள் காலையில் நாம் நிலை வாசலை திறக்கும் பொழுது மூன்று முறை நற்பவி நற்பவி நற்பவி என்று கூறிக்கொண்டு திறந்தோம் என்றால் கண்டிப்பான முறையில் நம்முடைய வீட்டிற்குள் குலதெய்வம், இஷ்ட தெய்வம், மகாலட்சுமி தாயார் எழுந்தருளி நம்முடைய பிரச்சினைகள் அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வை காட்டுவார்கள் என்று கூறப்படுகிறது.