உள்ளுராட்சி தேர்தல் அறிவிப்பு வெளிவரவுள்ள நிலையில் இலங்கையின் பல மாவட்டங்களின் உதவித் தேர்தல் ஆணையாளர்கள் பலருக்கு உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளிற்கு ஆணைக்குழுவினால் உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய வடக்கில் வவுனியா மாவட்டத்திற்கு, சி.அமல்ராஜ், யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு ஆர்.சசிலன், மன்னார் மாவட்டம் முகுந்தன், கிளிநொச்சி வே.சிவராஜா எனப் புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.