தெரணியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யட்டிவல பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோத மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் கோடாவுடன் தெரணியகல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (15) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையின் போது, சந்தேகநபரிடமிருந்து 1,434 லீற்றர் கோடா (08 பீப்பாய்கள்) கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், இந்த சம்பவம் தொடர்பில் தெரணியகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




















