நாட்டின் பொருளாதார உற்பத்தியில் பின்னடைவு ஏற்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
பெருமளவிலான படித்த இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறி வரும் நிலையில் இந்நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான முதல் நாணயக் கொள்கையை வெளியிட்டுள்ள இலங்கை மத்திய வங்கி, அனுபவம் வாய்ந்த பணியாளர்களை இழப்பதால் வணிகங்களில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளது.