அம்பாந்தோட்டை, தம்மென்னாவ வனப்பகுதியில் நேற்று (16) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 8,516 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபரை கைது செய்வது தொடர்பில் அம்பாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.