கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் எஹெலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று (17) இரவு எஹெலியகொட பொலிஸ் பிரிவின் மோரகல சந்தி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஆந்ராகல பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் என தெரிவிக்கப்படுகிறது.
2025 ஜனவரி 17 ஆம் திகதி, எஹெலியகொட பொலிஸ் பிரிவின் ஹொரகொட வீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவம் தொடர்பில் எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.