எவ்வித முன் அறிவித்தல் இன்றி , மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றிய சிறுவர்களுக்கான விசேட வைத்திய நிபுணர் பணியில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகின்றது.
வைத்தியரின் திடீர் விலகலால் தமது குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் உரிய முறையில் வைத்திய சேவையினை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சிறுவர்களின் பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான நோயாளர் விடுதி இலக்கம்-07 மற்றும் புதிதாக பிறக்கின்ற குழந்தைகளுக்கான விசேட வைத்திய நிபுணர் கடமையாற்றி வந்துள்ளார்.