வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுத்தெற்கு பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட மூவர் ஒரு வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று(26.02.2025) இடம்பெற்றுள்ளது.
குறித்து மேலும் தெரியவருகையில்,
வட்டுத்தெற்கு பகுதியில் மரணச் சடங்கு ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்ததும் சிலர் தப்பிச் சென்றுள்ளனர்.
இதன்போது மூவர் ஒரு வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



















