கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான பொரளை மயானத்தில் ,மாநகர சபை ஊழியர் ஒருவர் மலர்சாலை நடத்தி வருவது கோபா குழுவில் தெரியவந்துள்ளது.
குடியிருப்பு மற்றும் காணியை முறைகேடாகப் பயன்படுத்தி மலர்சாலை நடத்தி வருவது தெரியவந்துள்ளது.
கொழும்பு மாநகரசபையின் அதிகாரிகள் இந்தக் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டபோது, சட்டவிரோத மலர்சாலையை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.
இந்நிலையில் அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டமை தொடர்பில் ஏற்கனவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கொழும்பு மாநகர சபை ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார்.



















