கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் 50வயது மதிக்கத்தக்க நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
வீடு ஒன்றின் பின்புறமாககைவிடப்பட்ட பகுதியில் நேற்று (06.03.2025) குறித்த சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
கல்லாறு பகுதியைச் சேர்ந்த பொன்னுத்துரை சித்திரவேல் என்பவரே இவ்வாறு மீட்க்கப்பட்டுள்ளார்.
இறந்தமைக்கான காரணத்தை கண்டறிவதற்காக தடயவியல் பொலிஸாரின் உதவியை நாடப்பட்டுள்ளதுடன் இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.