உதவி வழஙகல் எனும் போர்வையில் புலம்பெயர் தேசத்தவர்களின் நிதியினை முறைகேடாக கையாண்டமை, உதவி வழங்கலின் போது பெண்களின் அனுமதியின்றி காணொலிகள் எடுக்கப்பட்ட நிலையில் குறித்த விடயங்கள் சமூக வலைத்தளங்களில் அண்மிய நாட்களில் எதிர்ப்பலைகளை உருவாக்கியது.
இந் நிலையில் நேற்றைய பாராளுமன்ற அமர்விலும் இவ் விடயம் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவால் பாராளுமன்றத்தில் பேசுபொருளாக்கப்பட்டது.
இவ்வாறு இருக்கையில் ஏற்கனவே எதிர்ப்புக்குள்ளான காணொலியான பண்டத்தரிப்பிலுள்ள குறித்த பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்குச் சென்ற வேளை வலையொளித்தள நடத்துநர் கிருஸ்ணா கிராமத்தவர்களால் பிடிக்கப்பட்டு இளவாலைப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் உதவிசெய்தல் என்ற போர்வையில் புலம்பெயர் தேசத்தவர்களிடமிருந்து அதிகளவான பணத்தினைப் பெற்று முறைகேடு மேற்கொள்தல், பெண்கள்.மற்றும் சிறுமிகளுடன் வலையொளித்தள காணொலியில் முறைகேடான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்தல் போன்ற விடயங்களால் அண்மைய நாட்களில் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பைச சந்தித்திருந்ததுடன் அவ்வாறு வலைத்தளங்களில் தனக்கெதிராக பதிவுகளை இடுவோர்களை தொலைபேசி அழைப்புக்கள் மூலம் அச்சுறுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.