சட்டவிரோத மதுபானம் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (11) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் ஜா – எல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏக்கல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஜா – எல , ஏக்கல பிரதேசத்தில் வசிக்கும் 39 மற்றும் 63 வயதுடையவர்கள் ஆவார்.
போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்த பணத்தை பயன்படுத்தி கொள்வனவு செய்ததாக கூறப்படும் 23,500,000 ரூபா பெறுமதியான வேன் ஒன்றும் கார் ஒன்றும், 1,200,000 ரூபா பெறுமதியான முச்சக்கரவண்டி ஒன்றும் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.