சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை (13) பிற்பகல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் வசிக்கும் 30 மற்றும் 46 வயதுடையவர்கள் ஆவார்.
சந்தேக நபர்களிடமிருந்து 12,000 வெளிநாட்டு சிகரட்டுகள் மற்றும் முச்சக்கரவண்டி என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




















