நடப்பு மார்ச் மாதத்தின் முதல் 13 நாட்களுக்குள் மட்டும் சுமார் ஒரு லட்சம் வரையான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் கடந்த 13ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 97 ஆயிரத்து 322 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இவர்களில் கூடுதலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்தே இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
மார்ச் மாதத்திற்குள் மட்டும் 14,848 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அதே நேரம் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் மொத்தமாக ஐந்து லட்சத்து 90 ஆயிரத்து 300 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.