கொஹுவல பகுதியில், பாடசாலை மாணவனை கூரிய ஆயுதத்தைக் காட்டி மிரட்டி திருடிய நபர், கற்களால் தாக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நுகேகொடை – நாலந்தராம சாலையில் விழுந்த கிடந்த நிலையில் குறித்த நபர் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் (16) குறித்த நபர், கொஹுவல பகுதியில் உள்ள பாடசாலை மாணவனை கூரிய ஆயுதத்தைக் காட்டி மிரட்டி, மாணவனின் பணப்பையை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
அந்த நேரத்தில் அங்கிருந்தவர்கள், அந்த நபர் மீது கற்களை வீசி தாக்கியதாகவும், தாக்குதலுக்கு மத்தியில் அவன் தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று பிற்பகல் நுகேகொடை, நாலந்தராம வீதியில் உள்ள நடைபாதைக்கு அருகில் அந்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், உயிரிழ்ந்த நபரின் தலையின் பின்புறம் மற்றும் காதைச் சுற்றி காயங்கள் காணப்பட்டதாகவும் பொலிார் கூறியுள்ளனர்.
அத்துடன், நபரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, மேலும் சம்பவம் குறித்து கொஹுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.