எந்த விதமான இராசயனமும் இல்லாமல் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியாக வைத்து உடலுக்கு நீரேற்றம் அளிக்கும் இளநீர் காலை நேரங்களில் குடிப்பதன் மூலம் இளநீர் நமக்கு செய்யும் நன்மைகள் என்ன என்பதை நாம் இங்கு பார்ப்போம்.
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
காலையில் இளநீர் அருந்துவதன் மூலம் நமது செரிமான ஆரோக்கியம் மேம்படுகிறது. செரிமான பிரச்சனைகள் இருந்தால் மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் வரலாம். இளநீரில் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் நொதிகள் உள்ளன. இது உணவை உடைத்து செரிமானம் சீராக நடைபெற செய்கின்றன.
குறிப்பாக வெறும் வயிற்றில் இளநீர் குடிக்கும் போது செரிமான ஆரோக்கியப் மேம்பட்டு, அஜீரணம், வயிறு உப்பசம், வாயு தொல்லைகள் போன்றவை ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்தும்
இளநீரில் வைட்டமின் சி ஊட்டச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. வைட்டமின் சி நமது நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்த உதவக் கூடிய ஒரு அருமருந்தாகும். காலையில் நீங்கள் முதலில் இந்த இளநீரை அருந்துவதன் மூலம் நோய் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
இதில் உள்ள நன்மைகள் நோய் பாதிப்புகள் ஏற்படாமல் எதிர்த்து போராட நமது உடலை தயார் படுத்துகிறது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நமது உடலில் தீங்கு விளைவிக்க கூடிய ஃப்ரீ ரேடிக்கல் போன்றவற்றை நடுநிலையாக்க செய்கிறது. இது நமது உடலில் நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்துவதால் தொற்றுநோய்கள் அபாயம் குறைகிறது.
உடல் எடையை இழக்க உதவும்
உடல் எடையை இழக்க வேண்டும் என்ற பயிற்சிகளில் ஈடுபடுபவர்கள் இளநீரை தினசரி அருந்துவது சிறந்த பலனைத் தரும். குறைந்த கலோரிகளைக் கொண்ட பானங்களில் இதுவும் ஒன்று. மேலும் இது நமது உடலுக்கு இயற்கையாகவே நீர்ச்சத்தினை வழங்குவதால், அடிக்கடி பசி ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இதனால் நாம் தேவையற்ற உணவுகளை சாப்பிடுவதும் தடுக்கப்படுகிறது.
மேலும் இளநீரில் உள்ள பொட்டாசியம் நமது உடலில் எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்தி, வளர்ச்சிதை மாற்றம் சீராக நடைபெற உதவுகிறது. தினசரி வெறும் வயிற்றில் இதனை குடிப்பதன் மூலம் பசியுணர்வு அதிகமாக தூண்டப்படாமல் இருக்கிறது. மேலும் உணவுகளில் உள்ள கலோரிகளின் அளவை குறைக்கவும் இவற்றில் உள்ள பண்புகள் உதவுகின்றன.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்
தினசரி காலையில் இளநீரை அருந்துவதன் மூலம் நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்கு படுத்த முடியும். இருப்பினும் மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே எடுத்துகொள்ள வேண்டும். இளநீரில் உள்ள நன்மைகள் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதை தடுத்து இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது.
மேலும் இதில் உள்ள பயோ ஆக்டிவ் என்சைம் இவற்றை செயல்படுத்துகின்றன. காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இந்த இளநீரை குடிப்பது நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பராமரிக்க உதவுவதாக கூறப்படுகிறது. அதே நேரம் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாதவர்களுக்கு இது இரத்த சர்க்கரையை அதிகரித்துவிடும். தினமும் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
சருமத்தை பாதுகாக்கும்
இளநீரில் இருக்கும் லாரிக் ஆசிட் ஆனது முதுமை ஏற்படாமல் தடுக்க உதவும். இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சரும நீரேற்றத்தை மேம்படுத்தி வயதான அறிகுறிகளை குறைக்கும். இது சரும செல்களை சரிசெய்யவும், முகப்பருவை கட்டுப்படுத்தவும், சருமத்தை பளபளப்பாக வைக்கவும் உதவுகிறது.
சருமம் நீரேற்றத்தை பெறுவதால் சருமத்துக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் முழுமையாக பெறமுடிகிறது. நாள் முழுவதும் புத்துணர்ச்சியூட்டும் வகையில் சருமத்தை அழகாக வைத்திருக்க செய்கிறது.