பெரும்பாலானவர் காலையுணவை தவிர்த்து விடுவார்கள். எழுந்தவுடன் ஒரு கப் டீ அல்லது காபியுடன் நாளை தொடங்க விரும்புவார்கள்.
அதன் பின்னர் தங்களின் வேலைகளை முடித்து விட்டு அலுவலகத்திற்கு சென்று விடுவார்கள்.
இதற்கிடையில் காலையுணவை பொறுமையாக அமர்ந்து சாப்பிடுவதற்கு அவர்களுக்கு நேரம் இருக்காது. பலரும் காலை உணவை தவிர்ப்பதே வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், காலை உணவு தவிர்க்கும் பழக்கம் ஆரோக்கியத்திற்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் காலையுணவை தவிர்ப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
வரவிருக்கும் நோய்கள்
1. காலை உணவை தவிர்க்கும் ஒருவரின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்படும். ஏனெனின் காலையுணவில் இருக்கும் ஆரோக்கியம் தான் முழு உடம்பையும் சுறுசுறுப்பாக வைத்து கொள்கிறது. அதே போன்று பசியைத் தூண்டும் ஹார்மோன் அளவு அதிகரிக்கும். இதனால் அதிகமாக சாப்பிட வாய்ப்பு உள்ளது.
2. காலை உணவை தவிர்க்கும் பொழுது இதய நோய் வரும் அபாயம் உள்ளது என ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரத்தம் அழுத்தம் அதிகமாக இருக்கும் பொழுது இதயம் தொடர்பான நோய்கள் வரலாம்.
3. காலை உணவு தவிர்த்தால் நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றல் குறைந்து விடும். காலை உணவு சிறுவயது முதல் அவசியம். ஏனெனின் காலையில் சரியாக சாப்பிடாத ஒருவருக்கு நாள் முழுவதும் மயக்கம், சோர்வு இருக்கும்.
4. காலை உணவு சாப்பிடாத ஒருவர் குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாட்டு பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. நாளடைவில் நோய் எதிர்ப்பு சக்தி, எலும்பு ஆரோக்கியம், செரிமான பிரச்சனைகள் உள்ளிட்ட பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது.