போதைப்பொருள் வாங்குவதற்கு பணம் கொடுக்க மறுத்த தாயை , மகன் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை சம்பவம் கொழும்பு, தெமட்டகொடை, ஆராமய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள நிலையில் 46 வயதுடைய மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் 68 வயதுடைய தாயொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தன்று, சந்தேக நபரான மகன் போதைப்பொருள் வாங்குவதற்கு பணம் கேட்டு தனது தாயுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது மகன் தனது தாயை அடித்து கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதான மகன் போதைப்பொருளுக்கு அடிமையானர் என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.