யாழ். மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த போராட்டம் இன்று (23.03.2025) முற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நல்லூர், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொடுப்பனவை கொடுப்போம் என சொல்வது கொலையை மறைக்கவே, சர்வதேச நீதி கிடைக்குமா உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.