வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அவரகொட்டுவ பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) மாலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
45 வயது மதிக்கத்தக்க 5 அடி 7 அங்குலம் உயரமுடைய நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமானது ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



















