துவிச்சக்கரவண்டி மோதியதில் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் நேற்று (24) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் மன்னார் – பேசாலை பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் ஆவார். இந்த நபர் கடந்த 22ஆம் திகதி வயலில் மாட்டினை மேய்ச்சலுக்காக கட்டிவிட்டு வீதிக்குச் சென்ற மீது சைக்கிள் மோதியுள்ளது.
இதில் காயமடைந்தவர் பேசாலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு, பின்னர் மன்னார் வைத்தியசாலைக்கும் அதையடுத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளார்.



















