கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, மன்னார் மாவட்டத்தின் மன்னார் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தகண்டிய உள்ளிட்ட பிரதேச சபைகளுக்கான தேர்தலும் எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட பிரதேச சபைகளின் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை கடந்த 10 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது.