சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் நபரொருவர் கைதாகியுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 19 வயதுடைய சந்தேக நபர் மாவனெல்லை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அன்வாரம பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 600 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.