கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏ 35 பிரதான வீதி ஊடாக பரந்தன் பெரியகுளம் கிராம அலுவலர் பகுதியில் பெண் ஒருவரிடம் தங்கச் சங்கிலியை அபகரித்து சென்ற சம்பவத்தில் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு பயணித்துக் கொண்டிருந்த பொழுது புளியம்பொக்கனை பகுதியில் இவத்து பெண்ணிடம் அதே பகுதியில் இருந்து பயணித்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அபகரித்து சென்றுள்ளனர்.
இதன் பெறுமதி மூன்று இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் என பொலிஸார் கூறியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய சந்தேக நபர்களை துரத்திச் சென்று இராமநாதபுரம் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து பெண்ணிடம் அபகரிக்கப்பட்ட தங்கச் சங்கிலி மற்றும் அவர்களின் உடமையில் இருந்து 2.25 m மில்லிகிராம் ஹெராயினும் 20 கிராம் கேரளா கஞ்சாவும் திருட்டில் ஈடுபடுவதற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.



















