கொழும்பில் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவின் அல்விஸ் அவென்யூ வீதிப் பகுதியில் நடத்தப்பட்ட விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
இந்த விடுதி மசாஜ் நிலையம் என்ற போர்வையில் தகாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கைது செய்யப்பட்ட நான்கு பேரில் மூன்று இளம் பெண்கள் தகாத செயலில் ஈடுபடும் நோக்கத்துடன் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
திடீர் சுற்றிவளைப்பு
கைது செய்யப்பட்ட மற்ற சந்தேக நபர் விடுதியின் முகாமையாளர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் பொரளை பகுதியை சேர்ந்த 46 வயதுடையவர் எனவும் 3 பெண்களும் ம் 28, 29 மற்றும் 34 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் வெல்லவாய, பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.