மாத்தறை – வெலிகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெனிபிட்டிய பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக இறைச்சிக்காக மாடுகளை வைத்திருந்த இருவர் வெலிகம பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெலிகம மற்றும் தெனிபிட்டிய ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 50 மற்றும் 55 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 03 மாடுகளும் 2 எருமை மாடுகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.அனுமதியின்றி மாடுகளை இறைச்சிக்கு வைத்திருந்த நபர் கைது!