வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத்தின் அடிப்படையில் இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் பாரிய மோசடி இடம்பெற்றிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்தது.
பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தலைமையில் நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா குழு) சமீபத்திய கூட்டத்தின் போது இது தெரியவந்தது.
இது தொடர்பில் கோபா குழு வௌியிட்டுள்ள முழுமையான அறிக்கையை கீழே காணலாம்.